Monday, March 17, 2014

பயத்தின் ஆறடி விதை

கொறிக்கும் குலை நடுங்க
தன் ஈரக் குலை நடுநடுங்க
புயல் எனசரண் பூந்தது முயல்,
தன் நிலையது, வளை எது புரியாமலே! 
விட்ட மூச்சும் தொட்டிடாத போதும்-நான்
கிட்டே வந்து முட்டிடாத போதும்
கிலிபிடித்து சிதறியோடும்
சிட்டு குருவிகளே, பட்டு பூச்சிகளே
போதும்...போதும்! 
ஆலமெய்தும் அரவத்தினை 
புல்லுருவும் பார்வைக்கு-இணை
எள்ளித்-துருவும், புறக்கணிப்புகளும்! 
போதும் போதும்!
 
ஆடு நனைய அழும் ஓனாய் - நீ
காடு பதறுவதாகவோ பதறினாய்?
உன் மீது பிண வாசம்
பசியாமலேயே-புசியாமலேயே 
தின்ன உயிர்களின்
வீச்சமுன்னுடம்பில் தின வாசம்!
புறக்கணிப்பில்லை...
புறமுதுகு எங்கள் வழியில்லை
விலி அது என அறிவாய்-நீ
வலி(வு) மிகு கொள்வதாய் எண்ணும்
அழிவின், கழிவின், பயத்தின்
விதை! 
  
-ஆறு

No comments:

Post a Comment