Sunday, June 12, 2016

கொள்ளிவாய்க் குமுறல்

சீனர்களின் உணவை ஜோடிக் கோல்களில்,
முட் கரண்டிகளில் இத்தாலிய உணவை, 
சப்பாத்தியை கூட விரல்களால் பிய்க்கும் 
போது தேவை படாத விளக்க உரைகள்,
பிடி சோத்தை கையில் அள்ளும் போது
தேவை படுகிறது!
துல்லியமான அடிப்படை காரணங்கள் இருந்தே விட்டாலும்-அதை
கேட்டுவிட்டால், போரிட துடித்தாலும்
மொழிப் படுத்தாத ஆயிரம்-ஜோடித் துருவும் கண்களின் கேள்விகளினால்
சலனப்படும் மனங்கொண்ட பகுத்தறிவாளிகளின் (?!)
கைகளில் ஒன்று; மனதிலோ வேறொன்று!
----------------------------------------------------------
அரை மனதாய் உடுத்தி 
நட்சத்திர விடுதிகளுக்கு
செல்லும் நாட்களில்
எதேச்சியான தொடர்பில்லாத எல்லா 
சிரிப்புகளையும் உறுஞ்சிக் கொண்டு
உப்பி கணக்கிறது வேட்டி.
--------------------------------------------------------
ஆடிப் பேய் காத்துக்கு வெலகும்
போர்வையா...ஒடல பிரியுமோடி 
ஞானத் தங்கமே!
அது பேர் என்னடி ஞானத் தங்கமே?
உசுரோடி ஞானத் தங்கமே-அது
உசுரோடி ஞானத் தங்கமே!!
------------------------------------------------

இறந்து, பின்..இரவில்
அனல் காய்ந்து
முன்னிரவில் பிசாசானது
மாடு.
பறையோசை என்று சொல்வானேன்?!
கொள்ளிவாய்க் குமுரல் என்போம்.
பேய் கத்த..புலிகள் அஞ்சும்!
-ஆறு