Saturday, June 17, 2017

நீர்த்திவலையும் நீலக்குயிலும்

எத்தனை நீ விரிந்து கிடந்தாலும்
எனக்கு,
பத்தாத வானம் நீ.
இந்த விளையாட்டு நமக்குள் வாடிக்கை தான்.
உடைந்து நொறுங்கி எனக்காய் 
கோடி துகள்களாய்
பெருகி விழுவாய்,
காலை பனியாய்.
கூரிய என் கூட்டின் முள் கம்புகளால்
கிழித்து, கோர்த்து
மறுபடி உனை முழுதாய் தைய்க்க முனைவேன்.
என் பாடல்களில் யாருக்கும்
அத்தனை அக்கறை இல்லை,
அவை அவர்களுக்கானவை இல்லை.
ஈரம் உடுத்திய என் கூட்டின் மீது ஆணை:
அலகுகள் அசைத்து நான் பாடுவது
ஊசி முட்களின் பழு போக்கவும்,
சிறுகிய பனிக்குள்
குறுகியே கிடக்கும்
உனது வலி நீக்கவும்.
-ஆறு