Tuesday, February 16, 2016

சுய பரிசீலனை

அவசரமாய் கனிந்ததை வருந்தி
அதிகாலையில் உதிர்ந்து விட்டது
இரவு;
எழுதிவைக்க நேரமில்லா நெரமொன்றில்
கனிந்து-கரைந்த கவிதையை போல!
-ஆறு

தாயின் துண்டுகளில்...

புட்டி பாலின் முலைக் காம்பில்
தொட்டில் சீலை வெதுவெதுப்பில்
ஆயா தோளின் ஸ்பரிசத்தில்
அவள் உலர் கூந்தல் வாசத்தில்
அங்கம் அங்கமாய் தன்னயே சிதைத்து,
விட்டுச்செல்கிறாளொரு ஒரு தாய்.

அழுகிறாள், தேடிவிட்டு
கதறுகிறாள் குழந்தை...சிதறிகிடக்கும் 
தன் தாயின் துண்டுகளில்...
போதிய அளவு தாய் இருந்தும்
தாய்மை இல்லையாம்

-ஆறு

மாறாமல்...

பிளீரிட்ட பாடல் நின்ற பின்னான 
சத்தமின்மை...
சலனமேதுமின்றி எப்போதும் போல்
பூக்காமல், புணராமல், உதிராமல்.
துடங்கியும், ஒலித்தும், முடிந்தும்
போனது...இன்னுமொரு பாடல்!
-ஆறு