Sunday, December 9, 2012

செருப்பு அருந்து போனது.


எனது கால் செருப்பு அருந்து விட்டது!
எதிர் பாராமல் அருந்து போகும் செருப்பு
எப்படி பட்டது தெரியுமா?
அது...தொண்டை வரை வந்து மறந்து போன வார்த்தை.
அது...காது அருந்து போன தைய்யல் ஊசி.
அது...நின்று போன கைக் கடிகாரம்!

நின்று போன கடிகாரம்
நேரத்தை முழுங்கும்,
அருந்து போன செருப்பு
நடு வீதியில் வைத்து மானத்தை வாங்கும்!
அய்யோ...எனது கால் செருப்பு அருந்து விட்டது!

மானத்திற்காக இல்லாவிடிலும்
முள்ளுக்கெனவேனும் தலை கவிழசெய்யும்,
தரை சூடும் செர்ந்து வாட்டும்!
பழகி போன பாதையிலும்
பார்த்து-பார்த்து பாதம் வைக்க சொல்லி
அச்சுறுத்தும்.
என்றைக்கும் இல்லாமல் காணாமல் போன
நடை பாதை தொழிலாளியை நினைக்க தூண்டும்!

ஒற்றை செருப்போடு நடை போடுவதா?
அருந்த செருப்பை கையில் கொண்டு தொடரவா?
ஒழிந்து போகட்டும் என வீசி எறிந்து போகவா?

மறு நாள் காலையில்
துக்கி எறிந்த செருப்பு 
அங்கே காணாமல் போனது.
எப்படி இருக்கிறதோ அப்படியே 
ஏற்றுக் கொண்ட யாரோட
போகியிருக்க வேண்டும்.

எனக்கு தான் அதை வைத்து கொள்ள ஆசை இல்லை
ஏனேனில், எனது அந்த செருப்பு அருந்து விட்டது!

-ஆறு.

2 comments:

  1. last 4 lines teach me many things, na

    ReplyDelete
  2. நன்றி, சிவா. 'உறவுகளை' உட்கருத்தாய் வைத்து எழுதிய ஒரு சிறு முயற்சி!

    ReplyDelete