Tuesday, December 4, 2012

நிறைவேற்றம் நிறைவல்லவே

சில வெகு நாள் ஆசைகள்
மரணத்தை போன்றவைகள்!
சர்வ நிச்சயமாய் ஒரு நாள்
உண்மையாகிவிடும் எனத் தெரியும்.
அப்படி ஆகிவிட்டால் தான்
அதை வைத்து என்ன செய்வதென்பது 
சுளுவாய் தெரிந்துவிடுவதில்லை!
-ஆ று


No comments:

Post a Comment