Tuesday, October 5, 2010

புதுத் தாலாட்டு

ஆராரோ ஆரீராரோ
அல்லி கொடியே
நீ ஆர் உயிரோ....
அவ்வை பாட்டி ஆசிர்வாதம் செஞ்சாரோ
அன்பு தாத்தா ஆனபுடிச்சு தந்தாரோ

மலர்மயிலே மடியினில் கிடந்திடு
வளர்வயலே விதையென காத்திரு
சுடர்காலையிலே கதிரோடு பூத்திடு.

இயர்கை காக்க வந்தாயோ
இயல்பை மீட்க்க துடித்தாயோ
இமைகள் சொக்க துயிலாயோ.

அநீதீ வெட்ட வேலெடுப்பாயோ
அன்பு சொட்ட பார்வைபூப்பாயோ
அம்புஇமையிடை கனாசேர்ப்பாயோ.

அரசியல் மாமன் மிரட்டினானோ
அரிசி தராமல் விரட்டினானோ
வீன் கூட்டம் திரட்டினானோ
மின் கூட சுருட்டினானோ
குஞ்சு கிளியே
கவலை கொள்ளாதே.....
சாரதியுனக்கு நிகர் கம்சனோ....
மயங்காமல் தூங்கிடு.....

ஜொ ஜொ ஜொ  ஜொ ஜொ ஜொ
சொல்பேசும் கடமே...
ஆராரோ....

உலகோடு ஓட என் கால் தருவேன்
அலகோடு கொத்த மீன் தருவேன்
நிலவோடு நீ தூங்க
இமையிடையே தேன் விடுவேன்...
இனிமை சுமந்து நீ சொக்கிடு......


-மா.ஆறுமுக பிரதீப்.

2 comments:

  1. ovvoru aanukkulaeyum oru azhagana thaaimai olinthirukkum pola!

    ReplyDelete
  2. ye loose enakku avlo avlo avlo pudichirukku... Eppadi ivalo azhaga yosikkura??

    ReplyDelete