Thursday, September 30, 2010

நம் தாய் வாழ்த்து.

பன்னிரு உயிர் கொண்ட உயிரே,தமிழே!
ஏடெடுத்து கவிதை நான் வரைய,
வாள் விழி பெண்ணும்,வானும்,வானத்து நிலவும்,
வண்டுறங்கும் மலரும்,வளைந்தோடும் நதியும்,
புவியும்,தன்னை பாட கெஞ்சின.
நானோ,உன்னை பாடி கொஞ்சுகிறேன்.
வஞ்சிக்கப் பட்டாலும் விந்தையோடு
உன்றன் வார்த்தைகளையாவது கேட்க
ஒளிந்து கொண்டன ஆசையில்!

கனி மூன்றும்,கடற்தூளும்,

பச்சிளம் பாகற்கனியும்,புளியும்,
செக்கசிவக்கும் மிளகாயும்,தாம்பூழ பாக்கும்,
கொண்ட சுவை கலந்த அறுசுவயே எங்கள் தமிழ்

வாளும் கூர்வேலும் ஏந்தி
வானும் இந்த மண்ணும் அளந்த
அளவில்லா வீரமே எங்கள் தமிழ்!


மெய்ஞானம்,விஞ்ஞானம்,கலை
பல கொண்ட அறிவே எங்கள் தமிழ்!

மடை திறந்த வெள்ளம்
வெளி தந்த மின்னல்
இவை கொண்ட வேகமே எங்கள் தமிழ்!

கதிர் வீசும் சூரியன் போல்
கொள்ளை நிலவினையும் போல்
பேரொளியே எங்கள் தமிழ்!

எதிர் வீசும் காற்றும்
எதிர் பாடும் குயிலும்
எழும்பி வரும் அலைகளிடும் இசையே எங்கள் தமிழ்!

வாழ்வும் வாழ்கலையும் எங்களுள் பாய்ச்சி
அமுது சுரக்கும் பரமே எங்கள் தமிழ்!

பரம்பொருளே முருகு தமிழே,

உன்னிடம் தமிழனாய் வேண்டுகிறேன்...
துறைகள் அடக்கி,அறிவு பெட்டகமாய்,
சிந்தனை களஞ்சியமாய்,
புதுமைகள் புகுத்திபழமையும் சேர்த்து...
முழு தரணிக்குமாய் மொழி
நம் தமிழ் என்றாக வேண்டும்!

- மா.ஆறுமுக பிரதீப்.

1 comment:

  1. Awesome;

    என்றென்றும் எல்லோரையும் ஏங்க வைக்கும்
    "சொற்கோலங்கள்"-

    ReplyDelete