நம் இதழ்களோடு வானவில்கள் வாசம் கொண்ட
நாட்களில் கூடலும் வரும் ஊடலும் வரும்!
சின்னஞ்சிறு ஊடல்பொழுதில் உன்னால்
தள்ளபட்டு கீழே விழுந்தாலும்
சினம் தனிந்து நீ கரம் நீட்டும்
தருணங்களில் ஊடல்களும் உண்மையில் சொர்க்கம்!
கேலிச்சிரிப்புகள் தாங்கி வந்த வகுப்பறை காற்றை
என் செவி மடல் மறந்திடுமா?
வட்டமாய் அமர்ந்து பகிர்ந்துண்ட உணவு
முழுமையாய் செமித்தழிந்திடுமா?
நாம் விளையாடித்திறிந்த மைதான மண்னின்
கறை சட்டையை விட்டு அகன்றிடுமா?
சாலை முழுவதுமாய் ஆக்கிரமித்து
அடாவடியாய் ஓட்டி வீடு திறும்பிய
பயணங்கள் சுலபமாய் முடிந்திடுமா?
பள்ளியை கடக்கும் ஓடையில் விட்ட
வினாத்தாள் கப்பல்கள்
கரைசேறாமல் போய்விடுமா?
அமர்ந்த இருக்கைகளில்
விளையாடிய மைதானத்தில்
படம்பார்த்த அரங்குகளில்
ஒன்றாய் சேர்ந்து தேடிப்பார்த்தோம்,
தொலைந்த இடத்தில் தொலைத்த பொருளை
தேடினால் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்.
தொலைத்த இடம் அதுதான்,
தொலைத்தவர் என்னவோ நாம் தான்
காலம் என்கிற காரனி
மாறியதில் திறும்பக் கிடைக்கவில்லை!
இருந்தால் என்ன?
பழசை நினைத்து சுவைத்தாலே
ஓராயிரம் சொர்க்கங்களின் தித்திப்பும்
திக்கற்று தீர்ந்து போய் விடும்.
தோழா, நாம் காலம் வெண்றவர்கள்!
மா.ஆறுமுக பிரதீப்.
school la padikkratha thavira ellam pannirukka
ReplyDelete