Saturday, March 3, 2018

அவரவர் வலிகள்...

இறகுகள் உடையவன் என்று 
இனம் பிரிக்கிறீர்கள்.
உனக்கென்ன கேடு என்று 
உண்மையில் கொஞ்சம் 
கலைந்த ஒப்பனைகளோடு. 
கை வாய்த்தவரே...கைப்பிடி 
வானம் விஞ்சியது உங்களுக்கு.
வஞ்சமில்லை. வாழ்க.
அடரும் விரிந்த இறகுகளின் கீழான 
அழுத்தம் ஒவ்வாமல் 
உயர எறிகிறது வானம்.
மிகுதி வானப் பகுதியும் 
என் இருப்பில்லை.
இறகுகளுக்கு சொந்தக்காரராய் 
இருப்பது இலகில்லை.  
-ஆறு 

விலகச்சிணுங்கி



தொட்டால் சிணுங்கிகளுள்
இவள்  
விதிவிலக்கு.
இது விலகச் சுருங்கும்.
புது வெயில் இளஞ்சூட்டில் 
புரண்டு விலகுபவனின்   
கை மணிக்கட்டு,
குவியும் 
இலைகள் 
ஐந்தின் 
ஊடே.
ஒருவேளை...
பனிமுத்தம் கிட்டி 
விழி திறக்கலாம்,  
இலை விரித்து 
பிடி தளர்க்கலாம்.
-ஆறு