Thursday, October 26, 2017

என்றென்றும் இனி என் அன்றாடம்

வாசத்தினை வாரி இரைத்து 
வளைமுடி வலையாவதும்,
நேசத்துணையுன் கதைதோரும்
நாசிமுனை ஒன்றோடொன்று நுனிபட்டு
காசிமனை கொல்லைபுறத்து கொடியேறுவதும்...
என்றென்றும் இனி என் அன்றாடம்!

காதோரம் உரசும் உன் மூச்சு 
கண்ணத்தில் கரைவதும்,
கனங்களின் கரையோரம் 
உன் கை பிடித்து
கால் நனைத்திருப்பதும்...
என்றென்றும் இனி என் அன்றாடம்!

இருவரிச்சாயம் உருகி
சிறு வரி பள்ளங்கள் நிறைவதும்,
கரு விழி கடையோரம் 
பெருவிழா கண்டெடுத்து
கனவாய் தொலைந்திருப்பதும்...
என்றென்றும் இனி என் அன்றாடம்!

வதை செய்யும் பிறை நெகிழ்ந்து 
கதி மோட்ச புணல் சேர்ப்பதும்,
வழி செல்லும் வாழ்வோடம் 
ஜதி சொல்லும் உன் கால் பட்டு 
சருகாய் மிதந்திருப்பதும்...
என்றென்றும் இனி என் அன்றாடம்!

-ஆறு