Wednesday, September 30, 2015

அட்சயக் குவளை

என் கனவுகளை ஒரு 
காகிதத்தில் ஊற்றினேன்.
நீ என் கனவுகளை 
குடித்து விட்டு அந்த
காகித குவளையை போட 
குப்பை தொட்டியை தேடுகிறாய்.
நில். எறிந்துவிடாதே!
நீ தினசரி அருந்தும்
ஒரு சராசரி தேனீர் குவளை அல்ல.
யார் எத்தனை முறை வந்தாலும்
என் கனவுகளை சுறக்கும்,
என் கனவுகளை தாங்கும்,
அட்சயக் குவளை!
-ஆறு

வெம்பிக் கனிதல்

ஞாயிற்றுச் சுடரில் வெம்பிக்
கனிந்த நிலவு...
வெளிச்சத்தை சுகந்தமாய்
படர்த்துகிறது இரவின் 
மைப்புதர்களுக்குள்.
ஒரு கவிஞனின் ஞாலத்தில்
கனிந்த புத்தகமும் கூட 
அப்படியொரு ஒளிவாச(க)த்தை
என்னுள்!
-ஆறு