Wednesday, October 1, 2014

பழக மொழிக...பழமொழிக(ள்)

முதல் கடிதம்:
வாங்க பழகலாம்!
சில் வண்டுச் சித்திரமே,

சித்திரம், கை பழக்கம் என்பார்களே!
கொஞ்சம் உன்னை பழக தருவாயா?


தேனிசை கூ ட குரல் பழக்கமே
என்று கேள்வி!
ஒரு பொழுது உன்னோடு பேசி-பழக
நீ வந்திசைந்திட மாட்டாயா,
பெண் நிற பாடலமுதே?

அனேக ஏக்கத்தோடு,
இவன்.


பதில் கடிதம்:

எலேய்!

எல்லாம் இருக்கட்டும்,
"பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே"
என்று கூவி கடுக்கா கொடுக்க மாட்டாயே?

சந்தேக நோக்கத்தோடு,
இவள்.


-ஆறு

ஞான வெளி

பெரிதளவில் பொருட்படுத்தபடாத,
கைக்கு அடக்கமாக
தினம் தினம் சின்னஞ்சிரு 
மரணத்தை கட்டிலில் பயின்றே இந்த பயனம்!
சேரும் இடமோ ஒரு நீண்ட நெடும் உறக்கம்!
----------------------------------------------------

மரத்தின் பொது நலம்...
பசியாற பழம்!
மரத்தின் சுய நலம்...
பழத்திற்குள் விதை!

-----------------------------------------------------------

அறு சுவை உணவு முடிந்தது.
இலை எடுத்து போட்டு,
பசியில் வயிற்றை தடவுகிறான்,
உணவகத்தில் இலை எடுக்கும்
சிறுவன்!

------------------------------------------------------

வெயில் களைந்து நிழல்
தரும் கிளைகள், சதா
வெப்பம் தாங்கி வாடுகிறதே என,
கவலை கொண்டு சொன்னால்,
என்னை பித்தன் என்பீரா?

-------------------------------------------------------------

அடைந்து களிப்புரவும், இழந்து கலங்கிடவும்
நடுவிலான உள்ள அந்த தெளிவற்ற உறவில் 
வசிக்கும் அலைகள், 
என்ன செய்யும் பா வம் 
வாரிச் சொரிந்த, கரை மனலை?
அயர்ச்சியுற வில்லை, சலிப்பு தட்டவில்லை, 
தயங்கிப் பகிறும் அந்த காதலை பார்க்க...பார்க்க!

--------------------------------------------------------------

இந்தச் சாலை வளைவின் 
திரைமறைவில் என்னதான் ஒளிந்திருக்கும்?!
கண்டுகொண்டேன்....
வளைவின் இறுதியில் எதையோ
ஒளித்து வைத்திருக்கும் இன்னும்
சில வளைவுகள்!


--------------------------------------------
இதழ் குவிந்து, கன்னம் தொடும் சத்தம்,
ஒன்று...இரண்டு...மூன்றாய் தரை
தொடுகிறது விதை.
அதுசமயம் எங்கோ...
யாரும் காணாத இருட்டில்,
காதலியின் கன்னத்தில்,
விதை விழுந்து, மணல் தொட்டு புதையும்
சத்தம்!
ஒன்று...இரண்டு...மூன்றாய்
விதைக்க படுகிறது முத்தம்.

ஞான வெளியில் இவ்விரண்டும்
இரு வேறு செயல்களன்று!

-ஆறு

ஹைக்கூ போல சில

யாரோ புள்ளி வைத்துவிட்டு, கோலமிட மறந்த வெளி
-இரவின் வானம்!
------------------------------------------------------------------
காற்றினால், செவி மடலத்தின் நடனம்.
-இசை!
------------------------------------------------------------------
"இடுக்கன் வருங்கால் நகுக"
படித்திருக்குமோ அறுவி?
விழும்போதும் பால் போல் சிரிக்கிறதே!
------------------------------------------------------------------
உலைஞ்ஞாயிரை உருக்கவல்ல,
உருகுமொரு உறையாபனித்துளி.
-காலம்.


ஆறு

ஆதியின் மூலம்?

எங்கிருந்தோ வந்த எண்ணங்கள்,
எண்ணங்களில் இருந்து வந்தவையாய் 
நான் நம்பி, அட்சரப் படுத்தியதும்...
கடத்த பட்டன, 
எவர் எவர் எண்ணங்களுக்கோ
எனது எண்ணங்கள்!

எங்கோ பிறந்து...
எங்கோ கலந்தன...
உயிர் போல!

எங்கும் பிறந்து...
எங்கும் கலந்தன...
உயிரை போலவே!
-ஆறு

Monday, March 17, 2014

மனதளவு வாழ்கை

ஒரே முறை தான்
புளியமரத்து பேய் கதையை
பாட்டி எனக்கு சொன்னாள்.
எப்போது, எங்கே ஒற்றை புளியமரம்
கண்டாலும்...ஒரு பேய் தலை கீழாய் 
தொங்கிகொண்டு தான் இருக்கிறது;
இன்றளவும்!
பேயும்,பயமும் தொங்குவது
நிஜத்தில் அந்த மரத்திலா? 
இல்லை இந்த மனத்திலா?
-ஆறு

பயத்தின் ஆறடி விதை

கொறிக்கும் குலை நடுங்க
தன் ஈரக் குலை நடுநடுங்க
புயல் எனசரண் பூந்தது முயல்,
தன் நிலையது, வளை எது புரியாமலே! 
விட்ட மூச்சும் தொட்டிடாத போதும்-நான்
கிட்டே வந்து முட்டிடாத போதும்
கிலிபிடித்து சிதறியோடும்
சிட்டு குருவிகளே, பட்டு பூச்சிகளே
போதும்...போதும்! 
ஆலமெய்தும் அரவத்தினை 
புல்லுருவும் பார்வைக்கு-இணை
எள்ளித்-துருவும், புறக்கணிப்புகளும்! 
போதும் போதும்!
 
ஆடு நனைய அழும் ஓனாய் - நீ
காடு பதறுவதாகவோ பதறினாய்?
உன் மீது பிண வாசம்
பசியாமலேயே-புசியாமலேயே 
தின்ன உயிர்களின்
வீச்சமுன்னுடம்பில் தின வாசம்!
புறக்கணிப்பில்லை...
புறமுதுகு எங்கள் வழியில்லை
விலி அது என அறிவாய்-நீ
வலி(வு) மிகு கொள்வதாய் எண்ணும்
அழிவின், கழிவின், பயத்தின்
விதை! 
  
-ஆறு

இடையிடயே பொருள்

ஒரு வாக்கியத்தில் இருவார்தைகள் இருந்தன...
முன்னுக்கும் பின்னும்
பின்னுக்கு முன்னுமான இடையில்
வெளுத்து கிடந்தது- வெத்து வேளி;
கண்களில் படாத,  
மெய்யினை மேவாத,
இரு சொற்களுக்குமான உறவை
அரூபத்தில் சலனமின்றி சுமந்தபடி!
-ஆறு

ஒரு துளி வானம்

கருமின்னல்கொடி இருதனல்துளிகளெனவே-சிதறி 
விழுந்த பெருநல் விழிகளதுவே...
கனி இதழ் தான் சிரிக்கயிலே ஒருகனம்
மூடித்திறந்திடுமே... அவை கொஞ்சம் மூடித் திறந்திடுமே
அந்தத் தளிர்நேரப் பொழுதினிலே 
சருகாக குளிர்நேர்பார்வைகள் உதிர்ந்து போகுமடி!
அது காதல் வேர்வரை துளிர்ந்து உரமாகுமடி!
நிலவொளிகள் கோடிதேக்கும் 
மாய மன்றமொன்று...தோடிபூக்கும் 
தேயமடியானதென்று...
நிலைகுலைந்து அங்கே விழுந்தேனடி-அது
மலர் சொட்டும் மனங்கமழ் தேனடி!
கடைவாய் கோடியில் ஆசைகள் தேக்குவதேனடி?
நிலவாய் கொடியில் மலர்ந்த நீ, ஒருதுளிவான் அடி!

வேண்டுமென்றே நாணும் உனை  செய்த்திடுவாய்
நாளும் நானும் உனை தழுவிட
வெண்டுமென்றே வேண்டுதல் பறபலச்  செய்திடுவாய்
பனியினும் பஞ்சுதுனியினும் நலிந்த நல்லரை
சிறையினும் சிறிது கொடிதெனக் கண்டேனே
பகலிலும் அந்தி இருளிலிலும் உன்னுடனே
களிப்பெய்தி வாழ்ந்திருப்பேன் மடமயிலே நானே!
-ஆறு

நிழல் பொசுக்கும் போதி மரம்



முடிவில்லா பாலைவனமொன்று
ஆயிரமாயிரம் போதி மரங்கொண்டு!
அடி கண்ணெ...அத்தனை 
மரங்களிருந்தென்ன?
தரை வெம்மி கொதிக்கிறது... 
பாளம் பாளமாய் வெடித்து கிடக்கிறது.
இங்கே போதி மரங்களிடம்
நிழல் இல்லை! உச்சி கொப்பிலே
விதை களுண்டு ஞானப்பழமில்லை! 
-ஆறு