ஓவியம்,
ஆறு
By,
Aru
விளக்கம்:
பாரதி, நீ ஒரு பறவை!
(உன்)சொந்த இறகுகளை நம்பி
எந்த உடையும்-கிழையிலும்
துளி பயமின்றி அமர்ந்தாய்,
கூறிய அலகு கொண்டு
அதில் மையூற்றி நிஜம் மறைக்கும்
நிழல் கிழித்தாய்,
"காக்கை, குருவி எங்கள் சா தி"
என முழக்கமிட்டாய்,
தொலைதூர கழுகு பார்வை
நீ கொண்டா ய்,
உன் நினைவுகள் வெறும்
நினைவுகளா?
அவை வீரிய விதைகள் அன்றோ!
உன் வாழ்கை வெரும் வாழ்கையா?
அது வாழ்வியல் தத்துவம் அன்றோ!
நீ தனி ஒரு மனிதன் தானோ?
அன்றி, ஞானத்தின் ராஜபாட்டையோ?!
பாரதி, நீ ஒரு மோட்ச பறவை!
-ஆறு