Sunday, May 13, 2012

தோழிக்கு மடல்!

பெண் சுதத்ந்திர கொள்கையயும்
புதுமை எனும் தத்துவத்தையும்;
சிந்தனைகள் விடுத்து உடைகளில் சுறுக்கி கொண்டாய்...
நோக்கங்கள் விடுத்து செயல்களில் சுறுக்கி கொண்டாய்...
அகத்திலன்றி புறத்தில் சுறுக்கி கொண்டாய், தோழி!
ஏன் அப்படி சுறுக்கினாய்?

ஒரு நொடி போதும்
நான் உன் சிறை உடைக்க...
என்றபோதும் நானாய்ச் செயவதாய் இல்லை!
தத்தி வரும் பிள்ளை தன்னை வந்து தொட்டுவிட, மண்டியிட்டு
இரு கைகள் கொண்டு அழைக்கும் தாய் போல
மறு முனையில் காத்து கிடப்பேன், தோழி!
அதுவரையில் இந்த வரிகளை உறக்க
உனக்காக பாடி கிடப்பேன், தோழி!